கடலோடியின் வலைப்பதிவுகள்

Thursday | July 28th, 2016

ரியோ - பிரேசில்

இறைவன் உலகை படைக்க எடுத்துக்கொண்ட ஏழு நாட்களில் முதல் ஆறு நாட்களில் உலகின் எஞ்சிய பகுதிகளையும் ஏழாம் நாள் ரியோ நகரை மட்டும் படைக்க எடுத்துக் கொண்டான் என்று இந்த நகரை பற்றி பிரேசில் மக்கள் பெருமை கொள்கின்றனர்.

அந்த பெருமைக்கு கொஞ்சமும் குறைவின்றி உண்மையிலேயே மிக அழகாக உள்ள நகரம்தான் ரியோ. இங்கு பார்க்க கூடிய மிக முக்கியமான இடங்கள் கொர்கொவடொ (Corcovado) மலை, சுகர்லோஃப் மலை (sugarloaf), உலக புகழ் பெற்ற கோபகபானா (copacabana) மற்றும் இபனிமா கடற்கரைகள் மற்றும் தாவராவியல் பூங்கா.

கொர்கொவடொ மலை

இந்த மலையின் உச்சியில் உலகப் புகழ் பெற்ற சிலைகளில் ஒன்றான ஏசு நாதரின் சிலை (Christ the Redeemer) உள்ளது. 2330 அடி உயரத்தில் மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அந்த சிலையின் உயரம் 100 அடி. இரு கரங்களையும் அகல விரித்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் விதம் நம்மை வருக வருக என வரவேற்கவோ என எண்ணத்தோன்றும். பிரேசில் நாட்டை சேர்ந்த “ஹெய்டர் ட சில்வா கோஸ்டா” என்பவர்தான் இதனை வடிவமைத்து கட்டுமானத்தின் போது பொறுப்பு ஏற்று நடத்தியவர். பிரான்சு நாட்டை சேர்ந்த “பால் லேன்டோவ்ஸ்கி” என்ற சிற்பி இதனை வடிவமைக்க உறுதுணையாக நின்றார். கரங்களையும் முகத்தினையும் மட்டும் அமைக்க ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அவர் எடுத்துக் கொண்டார். 1926-ம் ஆண்டு துவங்கி இதனை முழுமையாக அமைத்து முடிக்க 1931-ம் ஆண்டு ஆனது.

Christ the Redeemer Rio

இங்கு இருந்து ரியோ நகரின் ரம்மியமான அழகை 360 பாகையில் கழுகுப் பார்வை பார்த்து ரசிக்கலாம். மலை உச்சியினை அடைய 30 நிமிடம் சாலை வழியாக பயணிக்கவேண்டும். நானும் எனது சுவீடன் நாட்டு நண்பரும் சென்ற வண்டியினை ஓட்டியவர் சென்ற வேகத்தில் எனது குடலே வெளியில் வந்துவிடும் போல் இருந்தது, குறுகலான அந்த மலை பாதையின் வளைவுகளில் அவர் சென்ற வேகம் அப்படி…Rio City View ரியோ

சுகர்லோஃப் மலைஇது மேலெ கூறிய மலையின் தம்பி என சொல்லலாம் , அதன் உயரத்தில் இது பாதிதான் உள்ளது. இங்கு செல்ல கம்பிவட சீருந்து (cable car) மூலமாக சுமார் 25 நிமிடம் இரண்டு கட்டமாக பயணித்து இங்கு சென்றடையலாம்.

Rio City View ரியோ

இந்த இடத்தை மலை என்பதை விட குன்று என்பதே பொருந்தும். முதல் கட்டமாக 720 அடி பயணித்து உர்கா எனும் நிலையத்தை அடைகிறது, பின் அங்கிருந்து இன்னும் ஒரு 580 அடி பயணித்து உச்சியினை அடையலாம். இங்கிருந்தும் ரியோ நகரின் எழிலை ரசித்து மகிழலாம்.

sugarloaf rio

கோபகபானா மற்றும் இபனிமா கடற்கரைகள்உலகின் மிக நீண்ட மற்றும் அழகான கடற்கரை கோபகபானா. நான் சென்றிருந்த போது கடற்கரை எங்கும் ஒரே மக்கள் வெள்ளம்… அடுத்த இரண்டு நாட்களில் “ரியோ கர்னிவல்” நடைபெற இருந்ததால் எங்கும் ஒரே மக்கள் வெள்ளம்.

தாவரவியல் பூங்கா

388 ஏக்கர் பரப்பளவில் ஒரு மிகப்பெரிய தாவரவியல் பூங்கவும் அமைந்து உள்ளது. அமேசோன் நதியை சுற்றி அமைந்துள்ள காடுகளில் அமைந்துள்ள அனைத்து வகை தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. பிரேசில் நாட்டின் மிக முக்கியமான தாவரவியல் ஆய்வுக் கூடம் இந்த பூங்கா. தொலைவில் இருந்துதான் காணக்கிடைத்தது… நேரமின்மையால் செல்ல இயலவில்லை.

[tags] Rio, Christ the Redeemer, Sugarloaf, Rio de Janeiro [/tags]

- பரணீதரன்

விவரங்கள்:

  • Title: ரியோ - பிரேசில்
  • Written on: December 21st, 2004
  • 1 comment

1 comment to “ரியோ - பிரேசில்”

படங்கள் மிக அருமையாக உள்ளன.. செய்திகளும்.

கிறிஸ?டோபர?
November 30th, 1999 at 12:00 am

Leave a Reply